ஒருவர் மனநோயால் அவஸ்தைப்படுவதற்கு உயிரியல் அல்லது உளவியல் ரீதியான காரணிகள் முக்கிய காரணமாக இருந்தாலும், ஆன்மீக ரீதியான ஒருசில கூறுகளாலும் மனநோய் வர வாய்ப்புள்ளது. அதாவது கெட்ட சக்திகள் அல்லது எதிர்மறை ஆற்றல்களாலும் ஒருவரது மனம் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒருவரது வீட்டில் கெட்ட சக்திகள் அதிகம் இருந்தால், அந்த வீட்டினுள் நுழையும் போதே சந்தோஷமாக இருந்த மனநிலையில் திடீரென்று மாற்றத்தைக் காணக்கூடும். சில பெரியோர்கள் தூங்கும் போது கட்டிலுக்கு அடியில் ஒரு டம்ளர் நீரை வைத்துக் கொண்டு தூங்க வேண்டும் என்று சொல்வார்கள். அது ஏன் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்
டம்ளர் நீர்
நம் வீட்டில் அல்லது அறைகளில் உள்ள கெட்ட சக்திகளை வெளியேற்ற ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஒரு டம்ளர் நீரை இரவில் படுக்கும் முன் கட்டிலுக்கு அடியில் வைப்பது.
என்ன நடக்கும்?
இப்படி தூங்கும் போது கட்டிலுக்கு அடியில் நீரை வைப்பதால், வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் வெளியேறி, மனம் அமைதியுடன் இருக்கும்.
செய்யும் முறை:
தூங்கும் முன் ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெளியே ஊற்றி விட வேண்டும். மீண்டும் மறுநாள் இரவில் புதிய நீரை டம்ளரில் நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.
எதிர்மறை ஆற்றல் இருப்பதை அறிவது எப்படி?
இரவில் ஒரு டம்ளரில் சுத்தமான நீரை நிரப்பி அறையில் வைத்து விட்டு, மறுநாள் காலையில் பார்க்கும் போது, அந்நீரில் சிறுசிறு நீர்முட்டைகள் மற்றும் நீர் கலங்கலாக இருந்தால், நீர் எதிர்மறை ஆற்றல் முழுவதையும் உறிஞ்சிவிட்டது என்று அர்த்தம்.