விஜய்யை பின்பற்றும் பிரபல இயக்குநர்!

தமிழ் சினிமாவில் விஜய்யை ரோல் மாடலாக வைத்து இருப்பவர்கள் பலர் உள்ளனர். ஏன் திரையுலக பிரபலங்களும் ஒரு சிலர் விஜய்யை பின்பற்றுகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நானும் அந்த விஷயத்தில் விஜய்யை தான் பின்பற்றுகிறேன் என கூறியுள்ளார் . நேற்று பிறந்த நாள் கொண்டாடிய அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

அப்போது விக்னேஷ் சிவன் அளித்த பேட்டிகளும் இணையத்தில் ட்ரெண்டாகி இருந்தன. அதில் ஒரு பேட்டியில் உங்களை பற்றி நிறைய கேலியும் கிண்டல்களும் செய்கிறார்கள். அதையெல்லாம் எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என கேட்டதற்கு,  தளபதி சொன்னது தான். இக்னோர் நெகட்டிவிட்டி என்பதை தான் நானும் பின்பற்றுகிறேன் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.