அந்தணர்கள் கஞ்சாவுடன் கைது……யாழில் இப்படியும் நடக்கின்றதா……?

கைதடி – கோப்பாய் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் பூசகர் இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரிடமிருந்தும் தலா 850 மில்லிக்கிராம் எடைகொண்ட கஞ்சா சரை இரண்டு கைப்பற்றப்பட்டன.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் தென்மராட்சியிலிருந்து வீடு திரும்பும் போதே கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர். சான்றுப் பொருள் சரைகளும் மன்றில் பாரப்படுத்தப்பட்டன.வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார் .