புதுக்கோட்டை மாவட்டம் வலப்பிரம்மன்காடு பகுதியைச் சேர்ந்த நித்யா என்பவருக்கும், திருநாளூரை சேர்ந்த சுந்தரராஜன் என்பவருக்கும் கடந்த 12 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
புதுமணத்தம்பதியினர் இருவருக்கும் திருமணம் ஆன தினத்திலிருந்தே சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், மாப்பிள்ளை சுந்தரராஜன் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சுந்தரராஜனைஅவரது பெற்றோர்கள் காப்பாற்றினார்கள். அந்த சமயத்தில் திடீரென நித்யாவும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த நிலையில் நித்யாவின் பெற்றோர்க்கு தகவல் கொடுக்கப்பட்டு, நித்யாவின் தந்தை இருவரையும் தனது வீட்டில் அழைத்து சென்று வைத்திருந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு சென்ற நித்யா மறுபடியும் விஷம் குதித்துள்ளார்.
உடனடியாக நித்யாவை பேராவூரணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். கொண்டு செல்லும் வழியிலேயே நித்யா உயிரிழந்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக நித்யாவின் உடலை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைதொடர்ந்து சுந்தரராஜன் மற்றும் அவருடைய குடும்பத்தாரிடமும், நித்தியாவின் குடும்பத்தாரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.