ஆடு, மாடுகளை பேசவைக்கும் நித்தியானந்தா!.

கர்நாடகாவில் உள்ள தனது ஆசிரமத்தில் நித்யானந்தா தனது சீடர்களிடம் உரையாற்றும் போது வெளியிட்ட வீடியோ தற்போது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வழக்கமாக சீடர்களிடம் உரையாடும் நித்யானந்தா, சீடர்களிடம் பேசுகையில்
மனிதர்களைப் போலவே விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்கும் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

மனிதர்களுக்கும் குரங்குகள் உள்ளிட்ட விலங்கினங்களுக்கும் உள்ளுறுப்புகளில் சில வேறுபாடுகள் உள்ளது. இதை சரிப்படுத்தி குரல்வளத்துக்கு காரணமான தொண்டையின் உள்பகுதியை சரிப்படுத்தி விட்டால் சிங்கம், புலி ஆகியவற்றை மனிதர்களை போலவே பேச வைக்கலாம் என்பதை நான் ஆராய்ச்சியில் தெரிந்து கொண்டேன்.
இதற்காக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் சோதனை வெற்றியடைந்த பிறகு இதை நான் உறுதிப்படுத்துகிறேன் என கூறினார். மேலும் அவர் பேசிய அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.