கடந்த 1965ஆம் ஆண்டு இதே நாளான செப்டம்பர் 19ஆம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.
1987-ல் அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் இரண்டு ஆண்டுகளில் கடற்படை விமானியானார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி டிஸ்கவரி விண்வெளி கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது இவர் பகவத்கீதை, விநாயகர் சிலை, கொஞ்சம் சமோசாக்களை விண்வெளிக்கு எடுத்துச்சென்றார்.
விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் சுனிதா. விண்வெளியில் ஓடிக்கொண்டே தனது தலைமுடியை கத்தரித்தார். பிறகு, “லாக்ஸ் ஆப் லவ்” அமைப்புக்கு அதை வழங்கினார்.