ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்தின் இறுதி கட்ட நெருங்கியிருக்கும் நிலையில் உள்ளது. தற்போது படத்தின் இசைவெளியீட்டு விழா அக்., 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘சர்கார்’ படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கி வருகின்றனர் படக்குழு.
இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ஒன்று வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் இடை வெளியிட்டு விழா வரும் அக் மாதம் 2 ஆம் தேதி நடக்க உள்ளது.
The first Single from #Sarkar will be released on the 24th at 6pm!#SarkarSingleOn24th #SarkarKondattam@actorvijay @ARMurugadoss @arrahman pic.twitter.com/5X3sSg5tAH
— Sun Pictures (@sunpictures) September 19, 2018