சீரியல் நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லலித்குமாரும், நிலானியும் ஒன்றாக இருந்த படுக்கையறை புகைப்படங்கள் வெளியானது. இதனால் நிலானி, காந்தி லலித்குமாரை காதலித்து ஏமாற்றி விட்டார் என கூறிவருகின்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து பல தகவல்களை அவர் கூறினார். அவர் கூறுகையில் கூறுகையில் நான் லலித்குமாரிடம் நண்பராக தான் பழகினேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக லலித்குமாரால் பல கொடுமைகளை அனுபவித்து இருக்கிறேன். குழந்தைகளுக்காகத்தான் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தேன்.
அவர் தான் என்னுடைய நட்பினை தவறாக புரிந்து கொண்டார் என நிலானி கூறியதை பொறுத்துக்கொள்ள முடியாத லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் காந்தி லலித்குமார் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.
தற்போது இது தொடர்பான ஆடியோ காட்சி ஒன்றை இலங்கையை சேர்ந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. இதில் கடைசி வரை நிலானி கதறும் போதும், சைகோ போல காந்தி லலித்குமார் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இத்தனை நாட்கள் நிலானியை தவறாக பேசி வந்தவர்கள், இந்த வீடியோவை பார்த்த பின்பு தங்கள் மனநிலையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் அளவிற்கு அதிர்ச்சியூட்டும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.