சில நபர்களை எவ்வளவு முயற்சி செய்தாலும் புரிந்துகொள்ள முடியாததற்கு காரணம், அவர்கள் மர்மங்கள் நிறைந்த ஆன்மாக்களாக இருப்பது தான்.
இந்த ராசிக்காரர்களின் செயல்களும், எண்ணங்களும் எப்போதும் மர்மமாகவே இருக்கும். எனவே அவர்களை எளிதாக எடை போட்டு விட முடியாது.
எந்தெந்த ராசிக்காரர்கள் மர்ம ஆன்மாக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து இங்கு காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை அவ்வ
ளவு எளிதில் எடை போட்டு விட முடியாது. இவர்கள் நிறைய விடயங்களை கவனிப்பார்கள் என்பதால், இவர்களை எளிதில் கணித்து விட முடியாது.
ஆனால், குறைவாகவேவெளிப்படுத்தும் குணமுடைய இவர்கள் புதிய எண்ணங்கள் கொண்டிருப்பார்கள். மேலும் புதிய சாகசங்கள் புரிவார்கள்.
அத்துடன் தங்களது பார்வையை இவர்கள் புதிது புதிதாக மாற்றிக் கொண்டே இருப்பதனால், விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு புரியாத புதிராகவே காணப்படுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அன்பானவர்களாகவும், வேடிக்கைகளை அதிகம் விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் குறும்பும், சேட்டையும் மிகுந்து இருக்கும்.
மற்றவர்கள் இவர்களை பற்றி யூகிப்பது அனைத்தும் பொய்யாகவே இருக்கும். ஏனென்றால், இவர்களின் ஆளுமை திறனை எளிதில் புரிந்துகொள்ளவே முடியாது.
எளிய இதயத்தை கொண்ட மனிதனாக இவர்கள் காணப்பட்டாலும், உள்ளுக்குள் கூற முடியாத அளவிற்கு உணர்வுகளை கொண்டிருப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தோல்வியை கண்டால் பயப்படும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே இவர்களை மர்மமான ராசிக்காரர்கள் என்றே கூறலாம்.
இவர்களின் அடுத்த நகர்வு பற்றிய விவரங்களை எப்போதும் ரகசியமாகவே வைத்து இருப்பார்கள். தங்களது எதிரிகளிடம் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்கும் மகர ராசிக்காரர்கள், யாரை வேண்டுமானலும் நம்புபவராகவும் இருப்பார்கள்.
சில சமயங்களில் இவர்களது ஆளுமை செயல் காரணமாக தவறாக புரிந்துகொள்ளபடுவார்கள். இவர்களை குறித்து புரிந்து கொண்டதாக யார் நினைத்தாலும், நடப்பது வேறொன்றாகவே இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் குறைவாக பேசக் கூடியவர்களாக இருந்தாலும், இவர்களது ஆளுமை திறன் மர்மமாகவே இருக்கும். இவர்களின் எதிர்காலம் பற்றி விடயங்கள் புரியாத புதிராகவே வைத்திருப்பார்கள்.
ஆனால், எல்லா கும்ப ராசிக்காரர்களும் மர்மமானவர்கள் கிடையாது. சிலர் குறைந்த அளவு பேசுவதால் புரிந்துகொள்ள முடியாதவர்களாக காணப்படுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அன்பானவர்களாகவும், மர்மமான ஆளுமையை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சில நேரங்களில் தங்களது சொந்த விருப்பங்களைக் கூட புரிந்து கொள்ள முடியாத நபர்களாகவும் இருப்பார்கள். எனவே எந்த ஒரு விடயத்திலும் மீன ராசிக்காரர்கள் குறித்து யூகிக்கவே முடியாது.