தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை!

பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு வரும் பயணிகள் இரயிலானது இன்று காலை 11 மணியளவில் புறப்பட்டு ரெட்டியார்பாளையம் கடந்து வந்துகொண்டிருந்தது.

அப்போது தண்டவாளத்தில் வாலிபர் தலை வைத்து படுத்திருந்தார் இதனை கண்ட இரயில் ஓட்டுநர் இரயிலின் ஒலிபெருக்கியை பலமுறை ஒழித்தார் மேலும் இரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்த முற்பட்டார்.

ஆனால் இரயிலை நிறுத்த முடியாததால் அந்த வாலிபரின் தலை மீது இரயில் சக்கரங்கள் ஏறியது. இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே தலை துண்டாகி உயிரிழந்தார்.

இந்த தகவல் காவல் துறையினருக்கு அளிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் காவல் உதவி ஆய்வாளர் காசிநாதன் தலைமையில் காவல் துறையினர் அங்கு வந்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட நபர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.