சிங்கத்தை பார்த்து சிரித்த சிறுமி: அடுத்து நடந்த சம்பவம்??

அமெரிக்காவின் Illinoisஇலுள்ள Peoria மிருகக் காட்சி சாலையில் நடந்த ஒரு எதிர்பாராத சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்கிறது.

Baylor என்னும் குழந்தை அந்த சிங்கத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாள். அந்த சிங்கம் தன்னை மறைத்துக் கொண்டு அவளையே பார்க்கிறது.

இரைக்கு தெரியாமல் தன்னை மறைத்துக் கொண்டு குறிபார்ப்பது சிங்கத்தின் வழக்கம். மெதுவாக பதுங்கி நடக்கும் அந்த சிங்கத்தை பார்க்கும்போதே, அது குழந்தையைக் குறி வைப்பது நன்றாகப் புரிகிறது.

குழந்தையோ பயப்படாமல் அதைப் பார்த்து கைகாட்டி சிரிக்கிறாள். அந்த குழந்தை சற்று திரும்புகிறாள், அவ்வளவுதான் அவள் மீது சீறிப்பாய்கிறது அந்த சிங்கம்.

தனக்கும் அந்த குழந்தைக்கும் நடுவில் ஒரு கண்ணாடி தடுப்பு இருப்பதை அப்போதுதான் அந்த சிங்கம் உணர்ந்தது போலும்.

சற்றே திரும்பிப் பார்க்கும் அந்தக் குழந்தை, சிங்கத்தை அருகில் ஆக்ரோஷமாக பார்க்கவும் பயந்து அழத் தொடங்குகிறாள்.

அவள் அந்த சிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அது அவளை நோக்கிப் பாய்ந்திருக்குமானால், அந்தக் குழந்தை அந்தக் காட்சியை தன் வாழ்நாள் முழுவதும் மறந்திருக்க மாட்டாள், நல்ல வேளையாக சிங்கம் பாயும் போது அவள் இந்தப் பக்கம் திரும்பி விட்டாள்.

பின்னரும் கண்ணாடியின் அருகிலேயே அவளையே பார்த்துக் கொண்டு நடக்கும் அந்த காட்சியைப் பார்க்கும்போதே நடுக்கம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.