அமெரிக்காவில் தாய் மற்றும் அக்காவை கொடூரமாக குத்தி கொலை செய்து விட்டு 15 வயது சிறுமி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் Albion பகுதியில் இருக்கும் வீட்டில் இருந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு போன் வந்துள்ளது.
உடனடியாக போன் எடுத்து பேசப்பட்ட போது, பெண் ஒருவர் நானும், என் மகளும் இங்கு இரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறோம்.
எங்களை வந்து காப்பாற்றுங்க என்று கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது இரண்டு பெண்கள் அங்கிருக்கும் அறையில் கத்தியால் குத்தப்பட்டு காயங்களுடன் இரத்தம் வழிந்த நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளனர்.
இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், Rosa Aminta Maldonado என்ற 44 வயது தாயும், 19 வயது மதிக்கத்தக்க Rosa Lee Maldonado என்ற அவரது மகளும் இந்த சம்பவத்தில் இறந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை செய்ததே Rosa Aminta Maldonado-ன் இளைய மகள் தான் எனவும், 15 வயது மதிக்கத்தக்க அந்த பெண் தாய் மற்றும் அக்காவின் கழுத்து அதைத் தொடர்ந்து தலைப் பகுதி என பல இடங்களில் கொடூரமாக குத்திவிட்டு, அதன் பின் ஒரு பெரிய கத்தியை வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது என்ன காரணத்திற்காக நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.