குழந்தைகளுக்கு விருப்பமான மொறுமொறு சிக்கன்!

தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம்
ரொட்டி தூள் – 150 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
பூண்டு, இஞ்சி அரைப்பு, மக்காச்சோள மாவு, உப்பு போன்றவை தேவையான அளவு
வினிகர், சோயா சாஸ் – 1 சிறிய தேக்கரண்டி
மிளகாய் தூள் – தேவையான அளவு
தயிர் – 3 தேக்கரண்டி

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

இஞ்சி, பூண்டுக்கலவையில் துண்டாக்கப்பட்ட இறைச்சியை போட்டு மிளகாய்த்தூள், தயிர், வினிகர், சோயா சாஸ், மக்காச்சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் இறைச்சி துண்டுகளை அதில் இருந்து எடுத்து ரொட்டி தூள் மீது பரப்பவும். அப்படியே இறைச்சி துண்டுகளை கொதிக்கும் எண்ணெயில் வறுத்தெடுத்து, சூடாக பரிமாறலாம்.

இது மொறு மொறுப்பாகவும் வாசனையுடனும் இருக்கும்.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை  என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.