வெந்தயம்- 1/2 கப்
கடுகு – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
காய்ந்த மிளகாய்- 6
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை பருப்பு (அ) முந்திரி- 4 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து லேசாக வெந்தயத்தைப் போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் கடுகைப்போட்டு லேசாக நிறம் மாறும் நிலையில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே போல் காய்ந்த மிளகாய், வேர்க்கடலை என தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த அனைத்துப் பொருட்களும் ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அதன் சுவை கூடுதலாக வேண்டுமென்றால் ஆட்டுக்காலில் இட்டு மைய இடித்துக் கொள்ளவும்.
வெந்தயப் பொடி ரெடி!
குறிப்பு
பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தையோ அல்லது வெந்தயப் பொடியையோ காய்ச்சி கொடுத்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
மாதவிடாய் காலத்தில் அதிகமான ரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தும்.
இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து முடியில் தடவி ரை மணி நேரம் கழித்து குழித்தால் முடி கொட்டுவது, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்னைகள் தீரும்.
முடி அடர்த்தியாகவும் வளரும்.
வெந்தயத்தை பருக்கள் மீது தடவினால் முகப்பரு நீங்கும்.