வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, தசமி திதியில், சனிபகவானின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில் 10.07-க்கு அமிர்த-சித்த யோகத்தில் குருபகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு (விசாகம் 4-ம் பாதத்தில்) குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 2018 அக்டோபர் 11-ம் தேதி வியாழன் அன்று 4:49-க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்கிறார் குருபகவான். மேலும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி 2:39 மணி வரை குருபகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார்.
இந்நிலையில் 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சியில் செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி காண்போம்.
மேஷம் :
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
ரிஷபம் :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும்.
மிதுனம் :
அஷ்ட லட்சுமிகளை வணங்கி வர தனவரவு மேம்படும். சனிக்கிழமைதோறும் காகத்திற்கு அன்னமிடுதல் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதால் நற்பலன்கள் கிடைக்கும்.
கடகம் :
புதன்கிழமைதோறும் துளசி இலைகளால் பெருமாளை வழிபட வேண்டும். , லட்சுமி தேவியையும் வழிபட்டு வரவும். ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் ஏற்படும்.
சிம்மம் :
வராஹி அம்மனை வணங்கி வருவதால் எதிர்ப்புகள் குறையும். சுந்தர காண்டத்தை சனிக்கிழமைதோறும் பாராயணம் செய்வது மிகுந்த நன்மையை அளிக்கும்.
கன்னி :
செவ்வாய்க்கிழமையில் முருகரை வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமையன்று ராகு நேரத்தில் காளிக்கு தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.
துலாம் :
லட்சுமி நரசிம்மரை தரிசித்து வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமையன்று பத்ரகாளி அம்மனுக்கு அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு வர காரியத்தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
விருச்சிகம் :
வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி வழிபடவும். விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு வரவும்.
தனுசு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு உங்கள் வசதிக்கு ஏற்றார்போல் வெற்றிலை மாலையும், வடமாலையும் சாற்றி வழிபட வேண்டும்.
மகரம் :
புதன்கிழமைதோறும் ராமரை வழிபட்டு வர நன்மைகள் கிடைக்கும். சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
கும்பம் :
திங்கட்கிழமைதோறும் பார்வதி தேவியை வணங்கி வரவும். விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல்கள் குறையும். காரியத்தடைகள் நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.
மீனம் :
முருகரை செவ்வாய்க்கிழமையில் வழிபட்டு வர மேன்மை உண்டாகும். வெள்ளிக்கிழமையில் லட்சுமி தேவியை வழிபட்டு வர பொருளாதாரம் மேம்படும்.