இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தில் காலநிலை மாற்றமும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர் முத்துகுமார மணி இதனை தெரிவித்துள்ளார்.எதிர் காலத்தில் வெப்ப நிலையில் உயர்வு மாற்றங்கள் ஏற்படும் போது, அது இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் 5 வீதத்தினால் குறைந்து செல்லும் என்றும் எச்சரித்துள்ளார்.அது 2050ஆம் ஆண்டில் 7 வீதத்தால் குறைந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பாதிக்கப்படும் இடங்களான யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார் போன்ற இடங்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், உலக வங்கியின் பொருளாதார நிபுணர் முத்துகுமார மணி ஆலோசனை வழங்கியுள்ளார்.