தற்போதைய வாழ்க்கைமுறையில் மனிதர்களின் உணவுப்பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது, மனிதனின் வாழ்கை முறையும் மாறிவிட்டது. தற்போதைய வாழ்கை முறையில் உடற்பயிற்சி என்பது அவசியமான ஒன்று. ஏனென்றால் மனிதர்கள் தற்போது உட்காந்த இடத்தில் இருந்தே வேலை செய்கிறார்கள்.
முந்தய தலைமுறைகளில் காலையில் எழுந்தவுடன் வீட்டில் “நீராகரம்” அதாவது முதல்நாள் இரவு வைத்த உணவில் தண்ணீர் ஊற்றி காலையில் அந்த தண்ணீரை உப்பு கலந்து கொடுப்பார்கள். அதுவும் அந்த அரிசி இயற்கை உரங்களால் தயாரிக்கப்பட்ட அரிசி. ஆனால் தற்போது சுவைக்காக மட்டுமே அனைத்தையும் உண்கிறோம். அப்போதைய மனிதர்கள் எங்கு சென்றாலும் சைக்கிள் ஓட்டுவதே வழக்கமாக வைத்திருந்தனர்.
தற்போதைய காலத்தில் அதிகமானோர் போதியளவு உடற்பயிற்சி செய்வதில்லை என உலக சுகாதார மையத்தின் மதிப்பீடுகள் தெருவிக்கின்றன. இது காலப்போக்கில் இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்படுகிறது.
சாதாரணமாக இளம் வயதினர் தினமும் 45 நிமிடங்களும், 45 வயதிற்கு மேற்பட்டோர்
30 நிமிடங்களும் குறைந்தது உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. எதற்கெடுத்தாலும் பைக் எடுத்து செல்வதை தவிர்த்து தினமும் குறைந்தது 3 கிலோ மீட்டர் தூரமாவது நடப்பது அவசியம்.