நடுவானில் உதிரத்துடன் துடித்த விமானப்பயணிகள்!

விமானத்தின் காற்று அழுத்த கட்டுப்பாட்டுக்கருவியை விமான ஓட்டி இயக்க மறந்ததால் நடுவானில் விமானப்பயணிகளின் காதுகள் மற்றும் மூக்குகளில் இருந்து உதிரம் வழிந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

மும்பை நகரிலிருந்து ஜெய்ப்பூர் நகருக்குப்பறந்து கொண்டிருந்த ஜெட் எயார் வேசுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு நேற்று இந்தஅவலம் ஏற்பட்டது.

இந்தச்சம்பவத்தால் ஏனைய பயணிகளிடமும் கடும் பதற்றம் உருவானதால் விமானம் மீண்டும் மும்பைக்கு திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டு பாதிக்கபட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்

இந்தசம்பவத்தை உறுதி செய்துள்ள விமானநிறுவனம், விமானத்தின் காற்று அழுத்தக்கட்டுப்பாட்டு பொறிமுறையை இயக்குவதற்கு விமான ஓட்டிகள் மறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்தச்சம்பவத்தையடுத்து இந்தியாவில் உள்ளுர் சேவையில் ஈடுபடும் அனைத்து விமானங்களிலும் சோதனை செய்யும்படி இந்திய மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன்ஜெட் எயார்வேஸில் இடம்பெற்ற சம்பவத்தின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.