லண்டனில் மர்மக்கொலையாளி யார்?

லண்டனில் குறைடன் பகுதி உட்பட பல புறநகரப்பகுதிகளில் கடந்த 3வருடங்களில் 400க்கு மேற்பட்ட பூனைகள் தொடர்சியாகமர்மமாக கொல்லப்பட்டு வந்தன.

இது ஒரு சீரியல் கில்லர் எனப்படும் தொடர் கொலையாளியின் கைவரிசையாகஇருக்கலாம் என கருதப்பட்டது. ஆரம்பத்தில் பூனைகளை கொல்லும் இந்த மர்மக் கொலையாளி அதன்பின்னர் மனிதர்களை கொலைசெய்யலாம் எனவும் ஊகங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து மேற்படி தொடர்கொலையாளி குறித்த தகவல்களை வழங்குவோருக்கு10.000 பவுண்ஸ் தொகை சன்மானம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 3 வருடங்களாக இந்த விடயத்தை விசாரணை செய்த ஸ்கொட்லண்ட்யாட் காவற்துறை இன்று விசாரணைகளின் முடிவைவெளி;ப்படுத்தியது.

ஆனால் ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப்போல இது ஒரு தொடர் கொலையாளியின்செயலோ அல்லது மனிதத்தாக்குதலில் பூனைகள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்களோ அல்ல என்பதை குறிப்பிட்டஸ்கொட்லண்ட் யாட் கொல்லப்பட்டபூனைகளில் 10 பூனைகளின் உடல்களை உடற்கூற்று ஆய்வுக்குஉள்ளாக்கியதன் அடிப்படையில் இந்த முடிவு பெறப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

பூனைகள் வாகனங்களில் அடிபட்டுஇறந்தபின்னர் அவற்றின் தலைகளை நரிகள் தமது இரைக்காக அறுத்துச்சென்றதால் பூனைகளின் தலைகள்துண்டிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.