எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை பங்களாதேஷில் ஆரம்பாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி குழாமில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வராசா மதுசன் இடம்பிடித்துள்ளார்.
இவர் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கையின் பயிற்சிக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
எனினும் உடற்றகுதிச் சோதனையில் தோல்வியடைந்தமை காரணமாக இவர் அப்போது குழாமில் சேர்க்கப்படவில்லை. அதன் பின்னர் உடற்றகுதிச் சோதனையில் வெற்றியடைந்த நிலையிலேயே தற்போது இலங்கை அணிக்குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், ஆசியக் கிண்ணத் தொடருக்கான தயார் நிலை வீரர்களில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.