கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான வெற்றிக் கிண்ணம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு வெற்றிக் கிண்ணம் உலகம் முழுக்க எடுத்துச்செல்லப்படுகின்றது.
அதன் ஒரு கட்டமாக உலகக் கிண்ணம் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள உலகக் கிண்ணத்தை வரவேற்கும் நிகழ்வு நேற்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க, இலங்கை கட்புலனற்ற கிரிக்கெட் அணி வீரர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஓரிரு தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.