விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் “96” படம் ரிலீஸுக்கு தயாராகும் நிலையில் உள்ளது. இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சி பிரேம் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி, ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
சீதக்காதி படத்தில், விஜய் சேதுபதி 75 வயது முதியவராக நடிக்கிறார். இந்நிலையில் அவரின் மற்றொரு வித்தியாசமான போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இது கடைசி விவசாயி படத்தின் புகைப்படமா இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்புகைப்படம் என்னவென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.