தினமும் 6 பாதாம் மட்டும் சாப்பிடுங்க..!

பாதாம் பருப்பில் நமது உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கின்றன.

பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம், பாஸ்பரஸ், இரும்பு போன்றவை இருக்கின்றன. இருந்த போதிலும் பாதாம் பருப்பை அளவோடு தான் சாப்பிடவேண்டும். உடலுக்கு நன்மை சேர்க்கும் என்பதால் அளவுக்கு மீறி சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக உடல் பருமனாகிவிடும்.

பாதாம் பருப்பில் கலோரிகளும், கொழுப்பும் அதிகமாகவே இருக்கிறது. ஆதலால் உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும்.

நம் உடலுக்கு சராசரியாக 15 மி கிராம் வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. ஆனால் ஒரு கப் பாதாமில் 25 மில்லி கிராம் வைட்டமின் ஈ உள்ளடங்கி இருக்கிறது. எனவே அளவுக்கு அதிகமாக பாதாம் உட்கொள்ள கூடாது. அப்படி சாப்பிட்டால் வயிற்று போக்கு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுபோல் தினமும் நமது உடலுக்கு 10 மில்லி கிராம் மெக்னீசியம் போதுமானது.

பாதாமில் மெக்னீசியத்தின் அளவு அதிகம் என்பதால், அளவுக்கு மீறி உட்கொள்ள கூடாது, மீறி சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பாதாமுடன் காரமான உணவு பதார்த்தங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது.

பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுமையான ஆரோக்கிய பலனை அனுபவிக்க முடியும். தினமும் 6 பாதாம்கள் போதுமானது.