கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தமிழ் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் நேற்றுக் காலை அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று பகல் அவரது சடலம் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண்ணான விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .