நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் சிறிய மற்றும் பெரிய வெங்காயத்தின் தாள் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
இத்தகைய மருத்துவ குணங்களை கொண்ட வெங்காயத்தாளை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்
தினமும் வெங்காயத் தாள் சாறைத் தொடர்ந்து குடித்து வந்தால் இதயத்தில் ஏற்படுகிற அடைப்பு 90% குறையும். மேலும் இதனால் இதயம் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
காக்காய் வலிப்பு
காக்காய் வலிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பச்சரிசி தவிட்டுடன் வெங்காயத்தாள் சாறு கலந்து மூக்கில் ஒரு சொட்டு விட்டால், உடனே குறையும்.
கண் பார்வை கோளாறுகள்
கண் பார்வை கோளாறுகள் மற்றும் கண்ணில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் வெங்காய தாள் மிகவும் பயன்பட கூடியது.
தசைகளின் உறுதி
வெங்காய தாளில் இருக்கும் பயன் தர கூடிய ஊட்ட சத்து அனைத்தும் நம் உடல் வளர்ச்சிக்கும் மற்றும் தசைகளுக்கு உறுதியை கொடுக்கும் தன்மை கொண்டது.
சரும சுருக்கங்கள்
தோல்களில் ஏற்படும் மாற்றங்களை தடுத்து சரும சுருக்கங்கள் மற்றும் இறந்த செல்களை அழித்து புதிய செல்களை உருவாகும் பண்பு கொண்டது.
காய்ச்சல்
காய்ச்சல் மற்றும் சளி தொல்லைகள் இதனை தொடர்ந்து உணவில் சேர்த்து உண்டு வந்தால் நல்ல பலனை கொடுக்கும் மற்றும் செரிமான கோளாறுகளையும் போக்கும்.
ஆஸ்துமா
ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களும் வெங்காய தாளை சமைத்து சாப்பிடுவதை விட ஜூஸ் செய்து நீர் ஆகாரமாக அருந்த தினமும் உணவில் சேர்த்து குணம் அடையலாம்.