கொக்கா கோலாவை விட யோக்கட் ஆபத்தானது என்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
யோக்கட் உற்பத்திகள் சக்கரை செறிவு கூடியவை.
இவற்றை உட்கொள்ளும் வாடிக்கையாளர்கள் தாம் நல்ல ஆரோக்கியமான உணவைத் தான் உட்கொள்கிறோம் என இருந்துவிடக்கூடாது என எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஜக்கிய இராச்சியத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 900 யோக்கட்டுக்களை பரிசீலனை செய்துபார்த்த பின்னரே இத்தகவல் வெளியாகியுள்ளது.
இதில் சேதன யோக்கட்டானது கொக்கா கோலாவிலும் அதிகளவிலான சர்க்கரையை கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இயற்கை மற்றும் கிரேக்க வகை யோகட்டுக்கள் குறைந்தளவான சுகஃரைக் கொண்டுள்ளதால் அவை பாதிப்பு குறைந்தவை.
இதனால், எடுத்துக்கொள்ளும் யோக்கட்டில் அடங்கியுள்ள சர்க்கரையின் அளவு தொடர்பில் பெற்றோர்கள் உட்பட அனைவரும் கவனமாக இருக்கவேண்டும் என ஆய்வாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.