தினமும் வெறும் வயிற்றில் இருக்கும்போது கண்டிப்பாக செய்யக்கூடாத முக்கியமான சில விஷயங்களை பற்றி பார்ப்போம்.
அண்டி-இன்ஃபிலாமேட்ரி மருந்துகள்
வெறும் வயிற்றில் அண்டி-இன்ஃபிலாமேட்ரி மருந்துகளை எடுக்கவே கூடாது. ஒருவேளை முன்னர் உணவு பரிந்துரைகள் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகி சரிபார்க்கவும்.
சுவிங்கம் கூடாது
வெறும் வயிற்றில் சுவிங்கம் சாப்பிடுவது, வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் 10-15 நிமிடங்களுக்கு மேல் சுவிங்கத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தூக்கம்
தூங்க செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவை முடித்திருக்க வேண்டும்.மேலும் தூங்கபோகும் முன் ஒரு கிளாஸ் பால் அல்லது ஆப்பிளை சாப்பிடலாம்.
முடிவு எடுத்தல்
வெறும் வயிற்றில் இருக்கும்போது நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக இருக்காது. எனவே வெறும் வயிற்றில் இருக்கும்போது முடிவு எடுப்பதே தவிருங்கள்.
மது அருந்துதல்
வெறும் வயிற்றில் மது குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். இவ்வாறு செய்வதால் ஆல்கஹால் உங்கள் உடலில் அதிகளவில் கலந்து, இதயம், கல்லீரம் மற்றும் சிறுநீரகத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வாதங்கள்
பசிவெறியுடன் இருக்கும்போது நீங்கள் சரியான மனநிலையில் இருக்கமாட்டீர்கள். எனவே அந்தநேரத்தில் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.
தீவிரமான உடற்பயிற்சி
வெறும் வயிற்றில் இருக்கும்போது உங்களது உடம்பு குறைவான சக்தியை உணருகிறது. எனவே அப்போது நீங்கள் உடற்பயிற்சி செய்வது மேலும் உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும்.
வாக்குக் கொடுத்தல்
அதிக பசியுடன் இருக்கும்போது மாற்றவரிடம் வாக்குக் கொடுத்தல், பேரம் பேசுதல் போன்றவற்றை செய்யக்கூடாது.
காஃபி குடிப்பது
காலை உணவை தவிர்த்து, காஃபி மட்டும் அருந்தும் மக்களுக்கு இதயத்தில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு செரிமான பிரச்சனைகளையும் உண்டாக்கும்.