தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல் துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது, கட்டிடக்கலை உதவியாளர், திட்டமிடல் உதவியாளர் ஆகிய காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
பதவி பெயர் : Architectural Assistant/ Planning Assistant
மொத்த காலியிடங்கள்: 13
மாத சம்பளம்: ரூ.37,700 – 1,19,500
வயது வரம்பு: 18 முதல் 30.
கல்வி தகுதி: நகர திட்டமிடல் துறையில் முதுகலை பட்டம் அல்லது சிவில் என்ஜினியரிங் துறையில் பட்டம் அல்லது கட்டிடக்கலை துறையில் பட்டம் அல்லது இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியர்ஸில் சிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரு தாள்கள் கொண்டது.
தேர்வு நடைபெறும் தேதி: 22.12.2018
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்.
கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 10.10.2018
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2018_18_Architectural_Planning_Asst.pdf