காலம் மாறினாலும், மாறாத மூடநம்பிக்கைகள், கணவருடன் வாழ தோஷம் கழிக்க சென்ற பெண்!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் உள்ள கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை வீதியில் வசித்து வருபவர் அசோக். 32 வயது நிரம்பிய அவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்த்து வருகிறார்.

இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற 3 வயது மகளும், ஜெயகணேஷ் என்ற 2 வயதுமகனும் உள்ளனர். மேலும் கிருஷ்ணவேணி மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் 19–ந் தேதி மாலை கிருஷ்ணவேணி மாயமாகியுள்ளார்.பின்னர் அவர் பாகூர் சாலையில் செங்கன்ஓடை பகுதியில் உள்ள காளி கோவில் அருகே சேலையால் கைகள் கட்டப்பட்டு, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

மேலும் கிருஷ்ணவேணி அணிந்திருந்த தாலிச்சங்கிலி, தோடு போன்ற நகைகளும் மாயமாகி இருந்தன.

மேலும் அங்கு சென்று பார்த்தபோது அந்த இடத்தில் எலுமிச்சம்பழம், குங்குமம் ஆகியவை சிதறிக்கிடந்தன. கொலை செய்யப்பட்டு கிடந்த கிருஷ்ணவேணியும் சிவப்புநிற சேலை அணிந்து, மிகவும் மங்களகரமாக கிடந்துள்ளார் .

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது அசோக்கின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோவிந்தராஜ் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதாவது, அசோக்கின் தங்கைக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்தநிலையில் அசோக்கின் பக்கத்து வவீட்டில் வசித்து வந்த கோவிந்தராஜ் அசோக்கின் குடும்பத்தினரை கோவிலுக்கு அழைத்துச் சென்று தோ‌ஷம் கழித்துள்ளார்.

இதையடுத்து சில மாதங்களில் அசோக்கின் தங்கைக்கு திருமணம் நடந்தது. இதனால் அசோக் குடும்பத்தினர் கோவிந்தராஜை முழுமையாக நம்பினர்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோவிந்தராஜ் கிருஷ்ணவேணியிடம், உன் கணவர் உன்னை விட்டு பிரிந்து சென்று விடுவார். அவருடன் நீ சேர்ந்து வாழவேண்டுமென்றால் அதற்கு தோ‌ஷம் கழிக்கவேண்டும் என்று கூறி வீட்டில் இருந்த 5 பவுன் நகையை எடுத்து வர சொல்லியிருக்கார் .

இதை முழுமையாக நம்பிய கிருஷ்ணவேணி வீட்டில் இருந்த 5 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தனது குடும்பத்தினரிடம் கோவிலுக்கு பால் ஊற்ற செல்வதாக பொய் கூறிவிட்டு கோவிந்தராஜ் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார் .

அங்கு சென்றதும் தோ‌ஷம் கழிக்கும்போது யாரும் பார்க்க கூடாது என கூறி மறைவான இடத்தில் மரத்தின் அடியில் அமர்ந்துள்ளனர் .பின் கிருஷ்ணவேணியின் கையில் எலுமிச்சம் பழத்தை கொடுத்து, இரு கைகளையும் அவரது சேலையால் கட்டியுள்ளார்.

பின்னர் கண்களை மூடி நன்றாக வேண்டிக் கொள் என்று கோவிந்தராஜ் கூறியதும் கட்டப்பட்ட கைகளுடன் கிருஷ்ணவேணி கண்களை மூடி நன்கு வேண்டியுள்ளார்.

அப்போது கிருஷ்ணவேணி சிறிதும் எதிர்பார்க்காத நிலையில் அவரது கழுத்தில் கோவிந்தராஜ் கத்தியால் அறுத்தார்.பின்னர் இரத்தம் வெளியேறி மயங்கி விழுந்த கிருஷ்ணவேணியின் தாலிச்சங்கிலி, கம்மல் மற்றும் அவர் கொண்டு வந்திருந்த 5 பவுன் நகைகளுடன் கோவிந்தராஜ் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்

பின்னர் கிருஷ்ணவேணியை காணவில்லை என அசோக்கும் அவரது குடும்பத்தினரும் தேடிய போது எதுவும் தெரியாதது போல் அவர்களுடன் சேர்ந்து கோவிந்தராஜும் தேடி உள்ளார்.

பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் கோவிந்தராஜ் சிக்கி அவர் கைது செய்யப்பட்டார் .
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .