சனிதோஷம் விலகி வாழ்வில் மகிழ்ச்சி பெற இதை மட்டும் செய்தால் போதும்…..

ஒவ்­வோர் ஆண்­டும் புரட்­டாதி மாதத்­தில் வரு­கின்ற சனிக்­கி­ழ­மை­கள் தோறும் சனி­ப­க­வானை நினைந்து மனம்,வாக்கு,மெய்­யால் வழி­பாடு இயற்­று­கின்ற மரபை இந்­துக்­கள் கடைப்­பி­டித்து வரு­கின்­ற­னர். இக்­கா­லப்­ப­கு­தி­யில் அதி­காலை வேளை­யில் எழுந்து நீராடி, தோய்த்­து­லர்ந்து ஆடை­கள் அணிந்து அடி­ய­வர்­கள் ஆலய வழி­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வர். சைவ ஆசார முறைப்­படி உணவு சமைப்­பர். வாழை இலை­யில் பழம், பாக்கு, வெற்­றி­லை­யோடு அன்­ன­மிட்டு அதற்கு உகந்த கறி­க­ளைச் சேர்த்து சனீஸ்­வ­ர­னுக்கு நிவே­த­னம் செய்­வர். காகத்­துக்­குச் சாதம் வைத்து வழி­பாடு இயற்­று­வர்.

சிவ­ன­ருள்

சூரி­ய­ப­க­வா­னுக்­கும் சாயா­தே­விக்­கும் மக­னா­கப் பிறந்­த­வரே சனீஸ்­வர பக­வான். இவர் காசிக்­குச் சென்று தன் பெய­ரா­லேயே ஒரு சிவ­லிங்­கத்தை பிர­திஷ்டை செய்து தின­மும் வழி­பாடு இயற்றி வந்­தார். அதன் பயன்­கொண்டே கிர­க­ப­த­வி­ யை­யும் அடைந்­தார். அது­மாத்­தி­ர­மன்றி சிவ­னி­ட­மி­ருந்து ஈஸ்­வர பட்­டத்­தை­யும் பெற்­றுக்­கொண்­டார்.

கிர­கங்­க­ளுள் ஈஸ்­வர பட்­டம் பெற்ற பெரு­மைக்­கு­ரி­ய­வ­ரா­க­வும் தாமத குண­மு­டை­ய­வ­ரா­க­வும் சனீஸ்­வ­ரன் திகழ்­கின்­றார். ‘மந்­தன், பிணி­மு­கன், முது­ம­கன், முட­வன், காரி’ என்­னும் நாம­க­ர­ணங்­கள் கொண்டு அழைக்­கப்­ப­டு­கின்­றார். சனீஸ்­வ­ர­னுக்­குப் பிரி­ய­மான உலோ­கம் இரும்பு. அது­வி­தமே பிரி­ய­மான மணி­யாக நீலத்­தை­யும், தானி­யங்­க­ளுள் எள், மலர்­க­ளுள் கருங்­கு­வளை மற்­றும் சுவை உணர்­வில் கசப்­பை­யும் விரும்பி ஏற்­றுக்­கொள்­கின்­றார்.

விருப்பு

எள் கலந்த உண­வி­லும், நல்­லெண்­ணெய் கொண்டு ஒளி­யூட்­டப்­ப­டும் விளக்­கி­லும் அதீத விருப்­பு­டை­ய­வர். கரு­ணைக் கட­லா­ன­வர். பய­மற்­ற­வர். விரும்­பிய பயன்­களை அருள்­வ­தில் காம­தேனு போன்­ற­வர். காலச் சக்­க­ரத்­தைப் பிளப்­ப­தில் கதி­ர­வ­னைப் போன்­ற­வர்.

சக்­தி­யு­டை­யோன்

ஸ்ரீ சனி­ப­க­வான் நவக்­கி­ர­கங்­க­ளில் மிக­வும் சக்தி வாய்ந்­த­வர். தனக்­கென்று தனி ஆதிக்­க­மும் கொண்­ட­வர். தன் பார்­வை­யி­னா­லேயே நன்மை தீமை­க­ளுக்கு ஏற்ப பலன்­களை அளிக்­கும் வல்­லமை உடை­ய­வர். வில்­லைப் போன்று ஆச­னத்­தில் வீற்­றி­ருப்­ப­வர். நீல­நிற மேனி உடை­ய­வர். முடி தரித்­த­வர். சூல­மும், வில்­லும், விர­த­மும், அப­ய­மும் கொண்ட நான்கு கரங்­களை உடை­ய­வர். கரு மல­ரை­யும் நீல­ம­லர் மாலை­யை­யும் புனை­ப­வர். கரு­நி­றக்­கு­டை­யும் கொடி­யும் கொண்­ட­வர். மேருவை வலம் வரு­ப­வர்.

சஞ்­சா­ரம்

வாழ்க்­கை­யில் ஒரு­வ­ருக்­குப் பொங்­கு­சனி வந்­து­விட்­டால், பொன்­னும் பொரு­ளும் வந்து சேரும். மங்கு சனி வந்­து­விட்­டால், நோய் நொடி துன்­பங்­கள் ஏற்­ப­டும். ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய வாழ்க்­கை­யி­லும் ஆயுள்க் காலம் முடி­வ­டை­வ­தற்­குள் அவர்­க­ளு­டைய ராசி­யில் ஏழரை வருட காலம் சஞ்­சா­ரம் செய்­ப­வ­ராக சனீஸ்­வர பக­வான் விளங்­கு­கி­றார்.

நளன் – தம­யந்தி கதை – வேட தம்­ப­தி­யர்

ஆகு­கன், ஆகுகி என்ற வேட தம்­ப­தி­யர் காட்­டி­லுள்ள குகை ஒன்­றில் வசித்­த­னர். அவ்­வ­ழியே வந்த துறவி ஒரு­வரை அவர்­கள் உப­ச­ரித்­த­னர். இர­வாகி விட்­ட­தால், குகைக்­குள் துற­வி­யும், ஆகு­கி­யும் தங்­கி­னர். அதில் இரு­வர் தான் தங்க முடி­யும் என்­ப­தால் வேடன் வெளி­யில் உறங்­கி­னான்.தன் மனைவி ஒரு ஆணு­டன் தங்­கி­யி­ருக்­கி­றாள் என்ற எண்­ணம் அவ­னுக்கு இல்லை. தன் மீது நம்­பிக்கை வைத்த வேடனை முனி­வர் பாராட்­டி­னார். அயர்ந்து உறங்­கிய வேடனை ஒரு மிரு­கம் கொன்று விட்­டது. விட­ய­ம­றிந்த ஆகு­கி­யும் உயிர் துறந்­தாள்.

பிற­விப் பயன்

சுய­ந­ல­மில்­லாத இத்­தம்­ப­தி­யர் மறு­பி­ற­வி­யில் நள தம­யந்­தி­யா­கப் பிறந்­த­னர். துறவி அன்­னப்­ப­ற­வை­யாக பிறந்­தார். நளன் நிட­த­நாட்­டின் மன்­ன­ராக இருந்­தான். ஒரு­நாள் அன்­னப்­ப­ற­வை­யைக் கண்­டான்.நள­னின் அழ­கைக் கண்ட பறவை, “உனது அழ­குக்­கேற்­ற­வள் விதர்ப்ப நாட்டு மன்­னன் வீம­னின் மகள் தம­யந்தி தான். அவளை திரு­ம­ணம் செய்து கொள். உனக்­காக தூது சென்று வரு­கி­றேன்” என்­றது. அன்­னத்­தின் பேச்­சைக் கேட்ட தம­யந்தி காதல் கொண்­டாள்.

இத­னி­டையே சனீஸ்­வ­ரர் உள்­ளிட்ட தேவர்­கள் தம­யந்­தியை விரும்­பி­னர். அவ­ளின் சுயம்­வ­ரத்­தில் அனை­வ­ரும் பங்­கேற்­ற­னர். எல்­லோ­ருமே நள­னைப் போல் உரு­மாறி வந்­த­னர். நிஜ நள­னும் சுயம்­வ­ரம் காண வந்­தி­ருந்­தான். புத்­தி­சா­லி­யான தம­யந்தி உண்­மை­யான நள­னுக்கே மாலை­யிட்­டாள். அவர்­க­ளுக்கு இந்­தி­ர­சே­னன், இந்­தி­ர­சேனை என்ற குழந்­தை­கள் பிறந்­த­னர்.

தேவர்­கள் செய்த சூழ்ச்சி

தம­யந்­தி­யைப் பெற முடி­யாத தேவர்­கள், சனீஸ்­வ­ர­ரி­டம் நள­னைப் பிடிக்­கும்­படி கூறி­னர். கடமை உணர்வு மிக்­க­வர்­களை சனீஸ்­வ­ரர் ஏதும் செய்ய மாட்­டார். அதே நேரம், கட­மை­யில் சிறு குற்­றம் இருந்­தா­லும் பொறுக்க மாட்­டார். நளனோ நல்­லாட்சி செய்­தான். இப்­ப­டிப்­பட்ட ஒரு­வனை அவ­ரால் பிடிக்க முடி­ய­வில்லை.

ஒரு முறை பூஜைக்கு தயா­ரான போது, சரி­யா­கக் கால் கழு­வ­வில்லை. “இதைக் கூடச் சரி­யாக செய்­யாத மன்­னன் நாட்டை எப்­படி ஆள­மு­டி­யும்?” எனக் கரு­திய சனி, அவ­னைப் பிடித்து விட்­டார்.

அயோத்­தி­யாவை சேர்ந்த நிசத் அர­ச­னுக்கு நளன் மற்­றும் குவாரா என்ற இரண்டு புதல்­வர்­கள் இருந்­தார்­கள்.நிசத் அர­சர் இறந்­த­வு­டன், நளன் அர­ச­னா­னார். பல்­வேறு ராஜ்­ஜி­யங்­க­ளைக் கைப்­பற்றி புகழை அடைந்­தார். இந்த சந்­தர்ப்­பத்­திலே சகோ­த­ர­னான குவாரா நளன் மீது பொறாமை கொண்­டார். சூதாட்­டம் தான் நள­னின் பல­வீ­னம் என்­பதை நன்கு அறிந்­தி­ருந்­த­வ­ராக சூழ்ச்சி செய்­தார்.நளனை தாய விளை­யாட்­டுக்கு போட்டி போட அழைத்­தார். இந்தப் போட்­டி­யில் நளன் அனைத்­தை­யும் இழந்­தான்.

வன­வா­சம்

இத­னால் அர­ச­னான குவாரா, நளனை அந்த ராஜ்­ஜி­யத்தை விட்டே வெளி­யேற்­றி­னார். இத­னால் வன­வா­சம் செல்ல வேண்­டிய சூழ­லுக்கு தள்­ளப்­பட்­டார் நளன்.காட்­டில் மனைவி, குழந்­தை­கள் படும் துன்­பத்­தைக் கண்ட நளன், ஒரு அந்­த­ணர் மூலம் குழந்­தை­களை தன் மாம­னார் வீட்­டுக்கு அனுப்­பி­னான்.தன் மனை­வி­யை­யும் மாம­னார் வீடு செல்ல பணிந்­தும் தம­யந்தி சாகும் வரை உங்­க­ளு­ட­னே­யி­ருப்­பேன் எனக் கூறி­னாள்.

ஆனா­லும் தம­யந்தி உறங்­கும் சம­யத்­தில் அவளைத் தனி­மை­யில் விட்­டு­விட்டு அவ்­வி­ட­மி­ருந்து நீங்­கி­னான் நளன். மறு­நாள் அதி­கா­லை­யில் கண்­வி­ழித்­துப் பார்த்த தம­யந்தி, நளன் அவ்­வி­டம் தன்­னைத் தனி­மை­யில் விட்­டுச் சென்­றமை குறித்து மனம்

வருந்­தி­னாள்.நடுக்­காட்­டில் தனி­மை­யா­கத் தவித்­தாள். இந்­த­ நி­லை­யிலே தம­யந்­தியை மலைப்­பாம்பு சுற்­றிக்­கொண்­டது. அவ்­வி­டம் வந்த வேடன் கரு­ணை­கூர்ந்து அவ­ளைக் காப்­பாற்­றி­னான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்­டி­னான். அவ­னி­ட­மி­ருந்து தப்­பித்த தம­யந்தி சேதி­ நாட்டை அடைந்து பணிப்­பெண்­ணாக வேலை செய்­தாள். பின்பு தந்­தை­யின் உத­வி­யோடு அவர் இருப்­பி­டம் போய்ச் சேர்ந்­தாள்.

கார்­கோ­ட­கன் அருள்

தம­யந்­தி­யைப் பிரிந்த நளன் காட்டு வழியே தனி­யா­கச் சென்று கொண்­டி­ருந்த போது,‘நளன், தயவு செய்து இங்கே வர­வும்’ என உதவி நாடி அழும் குரல் ஒன்று கேட்­டது. அழுகை கேட்ட திசையை நோக்கி நளன் சென்­றான். காட்­டின் ஒரு பகுதி எரிந்து கொண்­டி­ருந்­ததை கண்­ணுற்­றான். தன்னை அழைத்­தது ஒரு பாம்பு என்­ப­தை­யும் தெரிந்து கொண்­டான். ‘நான் தான் கார்­கோ­டகா,பாம்­பு­க­ளின் அர­சன். என்னை இந்த தீயில் இருந்து காப்­பாற்­ற­வும்.’ என பாம்பு நள­னி­டம் உதவி கோரி­யது. அது­வி­தமே கார்­கோ­ட­கனை தீயில் இருந்து காப்­பாற்­றி­னார் நளன்.

திடீ­ரென சற்­றும் எதிர்­பா­ராத வகை­யில் நள­னைப் பாம்பு தீண்­டி­யது. பாம்­பின் விசம் நள­னின் உடம்­பில் ஏறி­ய­தால், அவர் உருக்­கு­லைந்து போனார்.இத­னால் அரு­வ­ருப்­பான தோற்­றத்­து­டன் காட்சி அளித்­தார் நளன்.எனி­னும் அப்­பாம்பு ஒரு அற்­புத ஆடையை வழங்­கிச் சென்­றது. அழகு இழந்த நளன், அயோத்தி மன்­னன் ரிது­பன்­ன­னின் தேரோட்­டி­யாக வேலை செய்­தான். நளன் அயோத்­தி­யில் இருப்­பதை அறிந்­து­கொண்ட தம­யந்தி, நளனை வர­வ­ழைக்க தனக்கு மறு­சு­யம்­வ­ரம் நடப்­ப­தாக அறி­வித்­தாள். ரிது­பன்­னன் அதற்கு புறப்­ப­டவே, நள­னும் வருத்­தத்­து­டன் தேரோட்­டி­யாக உடன் வந்­தான்.

சனீஸ்­வ­ரர் அருள்

அப்­போது, நள­னைப் பிடித்த சனி நீங்­கி­யது. தேரோட்­டி­யாக இருந்த நள­னை­யும், தம­யந்தி அடை­யா­ளம் கண்­டாள். நளன், கார்­கோ­டன் அளித்த ஆடையை அணிந்து தன் அழ­கான சுய­உ­ருவை மீண்­டும் பெற்­றான்.திரு­நள்­ளாறு என்­னும் தலத்தை அடைந்த போது, ஏழ­ரைச்­சனி நீங்­கி­யது. சனீஸ்­வ­ரர் நளன் முன் தோன்றி, தன்­னால் ஏற்­பட்ட துன்­பங்­க ­ளுக்­குப் பரி­கா­ர­மாக வரம் தரு­வ­தா­கக் கூறி­னார்.

நள­னும் அதை ஏற்­றுக் கொண்­டான். “சனீஸ்­வ­ரரே! நான் பட்ட துன்­பங்­களை எவ­ருமே அனு­ப­விக்­க­க் கூடாது. என் மனை­விக்கு ஏற்­பட்ட துன்­ப­க­ர­மான நிகழ்­வு­கள் எந்­தப் பெண்­ணுக்­கும் ஏற்­ப­டக்கூடாது. என் கதையை படிப்­ப­வர்­களை துன்­பு­றுத்­தக்கூடாது.” என வரம் கேட்­டான். சனி­ப­க­வா­னும் அருள் புரிந்­தார்.அது­வி­தமே இக் கதை­யைப் படிப்­போர்க்கு சனி தோஷம் வில­கும் என்­பது ஜதீ­கம்.

ஆகவே, இத்­தகு அருள் சிறப்­பு­கள் நிறைந்த புரட்­டாதி மாதத்­தில் வரு­கின்ற சனிக்­கி­ழ­மை­கள் தோறும் சனி­ப­க­வானை நினைந்து விரத அனுட்­டா­னங்­க­ளைக் கடைப்­பி­டித்து, வாழ்­வில் சகல சம்­பத்­துக்­க­ளை­யும் சௌபாக்­கி­யங்­க­ளை­யும் பெற்று இன்­ப­மாக வாழ்­வோ­மாக.