செல்போன் கடைக்கு வந்த பிரபல நடிகை.! போலீசார் தடியடி!

நகை கடை திறப்புக்கு வந்த பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியை காண அவரின் ரசிகர் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் போலீசார் தடி யாடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

திருப்பூரில் புதிதாக செல்போன் கடையின் திறப்பு விழாவுக்கு, நடிகை நிக்கி கல்ராணி வருகை தருவதாக விளமபரம் செய்ப்பட்டதை பார்த்த அவரின் ரசிகர்கள் அந்த கடையின் முன் குவிந்தனர்.

ஒரு கட்டத்தில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படவே, போலீஸ் தடியடி நடத்தி கலைத்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகரின் குமரன் சாலையில் புதிதாக ஒரு செல்போன் கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது. இந்த கடையை நடிகை நிக்கி கல்ராணி திறந்து வைத்தார். மேலும் அந்த கடையில் முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு 1000 ருபாய் மதிப்புடைய செல்போனை, வெறும் 200 ரூபாய் விலைக்கு கொடுப்பதாக கடையின் நிர்வாகம் அறிவித்தது.

இதன் காரணமாகவும் கடையில் கூட்டம் அதிகரித்தன போலீசார் தெரிவித்தனர். இதில் போலீசார் நடத்திய தடியடியில், வந்த கூட்டம் தலை தெறிக்க ஓடியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.