ஜெயலலிதா தவறு செய்துவிட்டார்.! அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி.!!

கடந்த ஞாயிறு அன்று (செப்டம்பர் 16) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோசத்துடன் பேசிய, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், எம்.எல்.ஏ-வுமான நடிகர் கருணாஸ், காவல்துறையினரையும், தமிழக முதல்வரையும், மற்ற சமுதாயகளையும் இழிவாக பேசினார். இந்த கருத்துக்கு பல தரப்பு மக்களிடமும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து, நேற்று முன் தினம் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அச்சுறுத்தும் வகையில் பேசியதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

கடந்த 16ம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக எம்.எல்.ஏ கருணாஸ் மீது ஐபிசி 153, 153(A)(1)(b)(c),307, 506(i),120(b), சிட்டி போலீஸ் ஆக்ட் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து 3 தனிப்படை அமைத்து காவல்துறை கருணாஸை தேடி வந்த நிலையில், நேற்று சென்னையில் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து போது, ”நான் தலைமறைவானதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும், செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏதேனும் தவறுதலாக பேசியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான் என்றார். இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் (அதிமுக) கருத்து தெரிவிக்கையில், ”அடக்கி வாசிக்க வேண்டும் சின்னபையன் கருணாஸ். இது போல அவர் பேசுவதை நிறுத்திக்கொள்ளவைத்து நல்லது. கருணாஸிற்கு சீட் கொடுத்தது ஜெயலலிதா செய்த தவறு. இரட்டை இலை சின்னத்தில் நின்று, வெற்றி பெற்றுவிட்டு, தற்போது கருணாஸ் இரட்டை இலையை விமர்சனம் செய்கிறார்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ”தமிழகத்தில் காக்கி சட்டை இருப்பதால்தான் அமைதி பூங்காவாக உள்ளது. கருணாஸின் பேச்சு ஈனதனமான ஒரு பேச்சு.அவரின் பேச்சுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் வருந்துகின்றேன். தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, ஏசுநாதர் போன்றவர். அடித்தால் வாங்கிக் கொள்வார். ஆனால் கருணாஸுக்குத் தைரியம் இருக்குமானால் என்னை அடிக்கட்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், இது சினிமா இல்லை என்பதை அவர் உணர வேண்டும். உடனடியாக கருணாஸை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் இவரைப்போல் ஆயிரம் பேர் கிளம்பிவிடுவார்கள்” என்று ஆவேசமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.