லாரியில் பாதுகாக்கப்படும் 273 உடல்கள்..

மெக்சிகோவில் பிணவறைகளில் உடல்களை பாதுகாக்க போதிய இடவசதி இல்லாதா காரணத்தால் லாரியில் 273 பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மெக்சிகன் சிட்டி:

மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் தொழில் பெருமளவில் நடக்கிறது. அதனால் ஏற்படும் தொழில் போட்டியில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடைபெறுகிறது. அதில் பலர் கொல்லப்படுகின்றனர்.

அவர்களின் உடல்கள் பிணவறையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் மேற்கு ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள பிணவறைகளில் உடல்களை பாதுகாக்க போதிய இடவசதி இல்லை. இதனால் அவை குளிரூட்டப்பட்ட கண்டெய்னருடன் கூடிய ஒரு லாரியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேற்கு ஜாலிஸ்கோ மாகாண தலைநகர் குயாடா லஜராவிலொரு லாரியில் ஒரு கண்டெய்னரில் 273 பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த லாரி அங்குள்ள பட்டறை அருகே 2 வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றத்துடன் பிணவாடை வீசியதால் குடியிருப்பு வாசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த லாரி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

அங்கும் குடியிருப்பு வாசிகள் எதிர்த்ததுடன் போராட்டமும் நடத்தினார்கள். அதன் காரணமாக பிணங்களுடன் லாரிகள் சுற்றி சுற்றி வருகிறது. மெக்சிகோ சட்டப்படி குற்ற வழக்குகளில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை உடனே எரிக்க முடியாது. ஆகவே வழக்கு முடியும் வரை உடல்கள் பாதுகாப்புடன் வைக்கப்படுகின்றன.