வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது, அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும்.
அந்த வகையில் எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன விளைவு ஏற்படும் என்றும், எந்த நிலையில் தூங்குவது நல்லது என்றும் தெளிவாக பார்க்கலாம்.
வடக்கு திசை
- வடக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் ஆரோக்கியம் மோசமாவதோடு, செல்வம், வேலை, குடும்ப நிம்மதி போன்றவை பாழாகும் என நம்பப்படுகிறது.
- முக்கியமாக பிணங்களை வடக்கு திசையில் தலை வைத்து தான் வைப்பார்கள். எனவே எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்காதீர்கள்.
தெற்கு திசை
- தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால், புகழ், செல்வம், வெற்றி போன்றவை தேடி வருவதோடு, மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
கிழக்கு திசை
- கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கும் போது, இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள், உடலுக்கு அனைத்து வகையான நேர்மறை ஆற்றலையும் வழங்கும்.
- முக்கியமாக இந்த திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
மேற்கு திசை
- இந்த திசையில் தலை வைத்து தூங்குபவர்கள் பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
எந்த நிலையில் தூங்குவது?
மல்லாக்கப் படுப்பது
- மல்லாக்க படுப்பது மிகவும் நல்லது. இந்த நிலையில் தூங்குவதால் கழுத்து வலி, முதுகு வலி தடுக்கப்படுவதோடு உடல் நல்லபடியாக இருக்கும்.
பக்கவாட்டில் படுப்பது
- கர்ப்ப காலத்தில் பெண்கள் இடது பக்கமாக தூங்குவதால் இடது பக்க உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்து, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
குப்புறப் படுப்பது
- சிலர் குப்புறப் படுக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். மேலும் இந்த நிலையில் படுத்தால், உடல் வலி தான் அதிகரிக்கும். அதோடு கழுத்து பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
எந்த பக்கம் கால்களை நீட்டிக் கூடாது?
- வாசலை நோக்கி கால்களை நீட்டிப் படுக்கக்கூடாது. இந்த நிலையில் இறந்த பிணத்தை தான் வைப்பார்கள்.
- தூங்கும் போது கால்களை கதவுகள் அல்லது ஜன்னல்களை நோக்கி நீட்டிப் படுக்கக்கூடாது.
- அதேப் போல் குளியலறை, கழிவறை, சமையலறை, பூஜையறை போன்றவற்றை நோக்கியும் நீட்டிப் படுக்கக்கூடாது