சற்றுமுன் : எம்எல்ஏ சுட்டுக்கொலை!

ஆந்திர மாநிலம் அரக்கு வனப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆளுங்கட்சி எம்எல்ஏவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் திடீர் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை ஆண்டு வரும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் கிடாரி சர்வேஸ்வரராவ். இவர் அரக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவர் அரக்கு வனபகுதியில் சென்று கொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் அவரை சுட்டுக் கொன்றனர். உடன் சென்ற முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா படுகாயமடைந்துள்ளார். இதனால் ஆந்திர மாநிலத்தில் திடீர் பதற்றம் உருவாகியுள்ளது