பெண்ணை நிர்வாணப்படுத்தி மிளகாய் பொடி தூவி கொடூரம்! காரணம்???

அசாம் மாநிலத்தில் போலி மது விற்பனை மேற்கொண்டதாக கூறி இளம் பெண்ணை கொடூரமாக தாக்கி கிராம மக்கள் நிர்வாண ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 19 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அந்த சம்பவம் நடந்த அன்று குடியிருப்பு ஒன்றில் புகுந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல பேர் அங்கிருந்த இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து தாக்கியுள்ளனர். பின்னர் கொடுமைப்படுத்தும் விதமாக பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவியுள்ளனர்.

அவர்கள் அந்த பெண்ணை கொடுமை படுத்தும்பொழுது சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதற்கான தண்டனை இது தான் என கூறியே அடித்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியதுடன் காவல்துறையினர் நடவடிவக்கை எடுக்கும் நோக்கில் விசாரணையை ஆரம்பித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண் தன்னை, வீடு புகுந்து தாக்கியதாகவும், கொடுமை படுத்தியதாகவும் கூறி அந்த பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் இதில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்வோம் என போலீசார் தெரிவித்தனர்.