இன்று சமுகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் விடயமாக திருகோணமலையில் சடலமாக மீட்கப்பட்ட விரிவுரையாளர் போதநாயகியின் விடயம் மாறியுள்ளது.
இது கொலையென சிலர் சந்தேகம் தெரிவித்திருந்தாலும் அவரது இறப்புத்தொடர்பான மருத்துவ அறிக்கை நீரில் மூழ்கியமையினால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே இறப்பிற்கு காரணமென கூறப்பட்டுள்ளது. அதைவிடவும் எந்த காயங்களோ வேறு தடயங்களோ கானப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அவ்வாறு இது தற்கொலையாக இருக்கும் பட்சத்தில் அவரை தற்கொலைக்கு தூண்டிய காரணி அல்லது நபர்கள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது.
பொதுவாக அவரிடம் பழகிய நபர்கள், இறந்தவரின் உறவினர்கள் மற்றும் அவரது கணவரான செந்தூரனின் ஊரவர்களை விசாரித்ததில் திருமணத்திற்கு பின்னர் அந்த பெண் அழுத்தத்துடன் இருந்ததாகவும் சிலவேளை குடும்ப வன்முறைக்கு உட்பட்டுருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஏதுவான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த விரிவுரையாளர் தான் இறப்பதற்கு முன்னர் தனது முகநூலில் ஒரு கவிதையினை வெளியிட்டு தான் உயிரை மாய்க்கப்போவதையும் அதற்கான காரணத்தையும் சூட்சுமமாக கூறியிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அத்துடன் முகநூல் நண்பர் ஒருவரின் பதிவில் விரிவுரையாளரின் கணவரின் தவறான செயல்களே தற்கொலைக்கான காரணமென குறிப்பிட்டிருந்தமை சமுகவலைத்தள பாவனையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் நன்கு படித்த மற்றும் சிறந்த சமுகத்தொடர்பினையும் பேணிவந்ந ஒரு பெண் தற்கொலை செய்வதென்பது சாதாரணமான விடயமல்ல அவர் மிக கொடூரமான அல்லது கனதியான அழுத்தத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும். கொலை செய்வது எவளவு குற்றமோ அதே போன்றுதான் தற்கொலைக்கு தூண்டுவதும் குற்றமாகும் .
எனவே இச்சம்பவத்தை தீர விசாரித்து கொலையாயின் கொலையாளியையும் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்களையும் இனம்கண்டு தண்டிக்க வேண்டும். குற்றவாளி யாராக இருப்பினும் அவர்கள் தமக்கிருக்கும் ஊடகப்பலம் , தீவிர தமிழ்த்தேசிய முகம் மற்றும் பிரபலத்தை பயன்படுத்தி தப்பிக்கவோ அல்லது திசைதிருப்பவோ இடமளிக்க கூடாது என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு?
கீழுள்ள முகநூல் பதிவுகள் உங்களுக்கு சில தெளிவுகளையும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்தலாம் . முடிவு உங்கள் கையில் …