ஈரோடு நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ்ஜெயின். இவர் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பிழைப்பிற்காக வந்து குடியேறியவர். இவரது மகள் பெயர் சுவேதா 24. இவர் சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் மிகவும் எடுப்பதாக இருந்து வந்துள்ளார். இவர் வளர வளர ஆன்மீக பக்தியும் அதிகரிக்கவே தாம் ஒரு துறவியாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
இந்த விசயத்தை அவரது பெற்றோரிடம் கூறினார். முதலில் அந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர்கள் பின்னர் அவரின் ஆன்மீக சிந்தனைகள் வளரட்டும் என்று அவரின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஈரோடு இந்திரா நகரில் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் சுவேதா புதிய ஆடைகள் மற்றும் நகைகள் அணிவித்த படி குதிரையின் மீது சவாரி மேற்கொண்டார். இந்த ஊர்வலத்தில் வடமாநில மக்கள் பெரும்பாலாக கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலமானது ஈரோடு தெப்பக்குளம், ஈஸ்வரன் கோவில் வழியாக புது செயின் கோவிலை அடைந்து முடிவு பெற்றது. சுவேதா வருகின்ற ஜனவரி மாதம் வடமாநில கோவிலுக்கு சென்று முறைப்படி துறவியாக மாறுகிறார் என்று அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர்.