கேர்ணல் ரமேஸை இராணுவம் கொலை செய்ததா? பதிலளிக்கும் சரத் பொன்சேகா

நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் எஸ் பி திசாநாயக்க ஆகியோர் புத்தி சுவாதீனம் இன்றி கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அமைசர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின்போது, கேர்னல் ரமேஷ் என்பவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தபோதும், அதன் பின்னர் இராணுவத்தால் அவர் கொலைசெய்யப்பட்டதாக அண்மையில் எஸ்.பி திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் அப்போதைய இராணுவத்தளபதியாக இருந்த அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என எஸ். பி திஸாநாயக்க கூறியது தொடர்பில், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் அறியாத விடயங்களையும் வெளியிட்டுவரும் குறித்த இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.