வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு.!

பேஸ் புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்த நாட்களில் இருந்தே முதன்மையான இடத்திலேயே இருக்கின்றன. இந்த செயலிகள் மூலமாக தங்களின் தகவல்களையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

மேலும் இந்த சமூக வலைதளங்களில் போலியான செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு பரப்பப்படும் போலியான செய்திகளால் ஒரு நாட்டில் கலவரம் மற்றும் வன்முறை போன்ற சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் காரணமாகிவிடுகின்றன,

இந்த காரணங்களால் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் வாட்ஸ்அப் நிறுவன தலைமை செயலதிகாரி க்ரிஸ் டேனியலுடனுக்கு கோரிக்கையை வைத்தார்.

அந்த கோரிக்கையாவது இந்த செயலியின் மூலமாக வதந்திகள் அதிகம் பரவுவதாகவும், அதனை தடுக்கும் வகையில் இந்திய நாட்டிற்கென வாட்ஸ்அப் மையம் நிறுவி அதில் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்குமாறும் கூறினார்.

இந்திய அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்ற நிறுவனம் குறைதீர்ப்பு அதிகாரியாக கோமல் லகிரி என்பவரை நியமித்துள்ளது.