வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது நீங்க நினைச்சது எல்லாம் நிறைவேற?

எந்த நல்ல காரியத்திற்கான நாம் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது எந்த விலங்கு எதிரில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நாம் வெளியில் புறப்படும் பொழுது பசு நமக்கு எதிரில் வந்தால் நல்ல சகுனமாகும். பசுவின் பின்புறம் தொட்டு வணங்கிவிட்டுச் செல்வது நல்லது.
ஒரு காரியத்திற்கு புறப்படும் பொழுது குதிரையைப் பார்த்தாலும், குதிரை எதிரில் வந்தாலும் மிகமிக நல்ல சகுனமாகும். செய்யப்போகும் காரியம் மிக எளிதில் நிறைவேறும்.


பயணத்தின் போது நாய் நமக்கு முன்னால் ஓடினால் பைரவரின் ஆசி உண்டு. பயணத்தால் நன்மை கிடைக்கும்.

பூனை எதிரில் வரக்கூடாது என்பார்கள்.
மூஞ்சுறு எதிரில் வந்தால் விநாயகரின் ஆசி நமக்குக் கிடைக்கும். முழுமையாக காரியம் வெற்றி பெறும்