நேற்று இரவு நிலவில் ஷீரடி சாய்பாபாவின் உருவம் தெரிகிறது என்று சமூக வலைத்தளங்களில் பரவியதால் சென்னை மக்கள் வீதியில் வந்து நிலவை பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆமாம் சாய் முகம் தெரிகிறது என பலரும் இந்த செய்தியை பகிர்ந்து வந்ததால் சென்னை மக்கள் இரவு 11 மணி அளவில் நிலவை பார்த்து தரிசனம் செய்தனர்.
பொதுவாக சின்ன வயதில் நிலவில் அவ்வை பாட்டி உள்ளார் என பெற்றோர்கள் கூறுவார்கள். அதை பார்க்கும்போதும் அவ்வாறே தெரியும். அதுமட்டுமின்றி நம் மனதில் எதை நினைத்துக்கொண்டு பார்த்தாலும் அந்த உருவம் தெரியும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.
ஆனாலும் நேற்று இரவு வாட்ஸ் அப்பில் வைரலான புகைப்படம் அணைத்து மக்களையும் வானத்தை நோக்கி பார்கவைத்துள்ளது. நிலவில் பாபாவின் முகம் தெளிவாக படிந்திருப்பது போல் காணப்பட்டதால், பாபாவின் முகத்தைப் நிலவில் பார்க்க பொதுமக்கள் திடீரென வீதியில் திரண்டனர்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அந்த பகிர்வை வெளியிட்டதும், வெளியில் வந்து வானத்தை நோக்கி பார்த்தவர்கள் பலரும் நன்கு படித்தவர்கள் என்பதே. தாங்கள் பாபாவின் முகத்தை நிலவில் பார்த்ததாக சிலர் கூறி பகிர்ந்தால் அதை பார்ப்பவர்களின் எணிக்கையும் கூடியது.