மல்லாகத்தில் தந்தையால் மகனுக்கு நேர்ந்த பரிதாபம்!

தந்தை, உழவு இயந்­தி­ரத்தை பின்­நோக்கி (றிவேர்ஸ்) நகர்த்த முயன்­ற­போது அதில் சிக்­குண்டு அவ­ரது இரண்­டரை வயது மகன் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளார்.

இந்­தச் சோகச் சம்­ப­வம் மல்­லா­கம் கல்­லா­ரைப் பகு­தி­யில் நேற்று மதி­யம் 1.20 மணி­ய­ள­வில் நடை­பெற்­றுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.விஜ­ய­காந்த் சஸ்­மி­தன் என்ற பால­கனே உயி­ரி­ழந்­துள்­ளார்.

வீட்டு வள­வில் உழவு இயந்­தி­ரம் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. வெளி­யில் செல்­வ­தற்­காக அதனை தந்தை இயக்­கி­யுள்­ளார்.

உழவு இயந்­தி­ரத்­தில் ஏறு­வ­தற்கு முன்­னர் வீட்டு முற்­றத்­தில் யாரும் இருக்­க­வில்லை. இயந்­தி­ரத்தை பின்­பக்­க­மாக இயக்­கி­யுள்­ளார்.

உழவு இயந்­தி­ரத்­தின் சத்­தத்­தைக் கேட்டு வீட்­டி­னுள்ளே விளை­யா­டிக் கொண்­டி­ருந்த சஸ்­மி­தன் வெளியே வந்­துள்­ளார்.

உழவு இயந்­தி­ரம் பின்­நோக்கி நகர்த்­தப்­ப­டும்­போது அதன் சில்­லி­னுள் அகப்­பட்­டுள்­ளார்.தந்தை உட­ன­டி­யாக உழவு இயந்­தி­ரத்தை நிறுத்தி சிறு­வனை மீட்டு தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­ற­போ­தும், சிறு­வன் உயி­ரி­ழந்து விட்­ட­தாக மருத்­து­வ­ம­னை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.