திமுக, அதிமுக,.இரண்டு கட்சிக்கும் ஒரே நேரத்தில் தடை.!!

கடந்த சில தினங்களுக்கு முன் திமுகவினருக்கும், திமுகவினருக்கு இடையே புதுக்கோட்டையில் கடும் மோதல் ஏற்பட்டு, கலவரமாக மாறியது. இதில் திமுகவை சேர்ந்த ஒருவரின் பெட்ரோல் பங்க் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விராலிமலையில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இதேபோல், திமுகவின் இந்த போராட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. இரண்டு கட்சிகளும் ஒரே நேரத்தில் போராட்டம் அறிவித்த காரணத்தால் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

இதனையடுத்து, திமுக, அதிமுக,. என இரண்டு கட்சிகள் சார்பிலும் போராட்டம் நடத்தினால் மீண்டும் கலவரம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என இரண்டு கட்சிகளுக்கும் இன்று போராட்டம் நடத்த தடை விதித்து, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.