ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலை உணவை பார்த்து தென் மாகாண முதலமைச்சர் ஆச்சரியமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் கடல் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ஜனாதிபதி காலி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியை அழைத்து வந்த ஹெலிகொப்டர் தடல்ல மைதானத்திற்கு சென்ற போது தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவும் அங்கு சென்றிருந்தார்.
இதன்போது, தான் இன்னமும் காலை உணவு பெற்றுக் கொள்ளவில்லை. தேரர் ஒருவரை பார்ப்பதற்கு சென்றமையினால் உணவு பெற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே சாப்பிட்ட பின்னர் செல்வோம் என ஜனாதிபதி கூறியவாறு வாகனத்தில் ஏறியுள்ளார்.
இதன்போது பாதுகாப்பு அதிகாரி ஜனாதிபதியிடம் உணவு பார்சல் ஒன்றை வழங்கியுள்ளார்.
சார் என்ன இதுவென அதிர்ச்சியுடன் ஷான் விஜயலால் கேட்டுள்ளார்.
ஏன் ஷான் அதிர்ச்சியடைகின்றீர்கள். நான் எப்போதும் இப்படி தான். எங்கு சென்றாலும் வீட்டில் சமைத்த உணவினையே உட்கொள்ளுவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நான் முன்னர் இந்த கதையை கேள்விப்பட்டேன். அலுவலகத்திற்கு மாத்திரம் என நினைத்தேன். எனினும் வெளியில் செல்லும் இடங்களுக்கும் கொண்டு செல்வதனை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளதென ஷான் குறிப்பிட்டுள்ளார்.