திடீரென கண் பார்வையை இழந்த மக்கள்!

நுவரெலியாவில் பலருக்கு திடீரென பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

நுவரெலியா வைத்தியசாலையில் கண் நோய்க்காக வழங்கப்படும் தடுப்பூசியின் மூலம் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் கண் சிகிச்சைக்கு சென்ற பல நோயாளிகளின் பார்வையில் குறைப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஊசி ஒன்று ஏற்றப்பட்டதன் பின்னர் தங்களுக்கு கண் தெரியாமல் போய்விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ஊசி வழங்கப்பட்டதன் பின்னர், நோயாளிகளுக்கு பார்வையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறி 12க்கும் அதிகமானோர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நுவரெலிய வைத்திய இயக்குனர் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஊசியை ஏனைய நோயாளர்களுக்கு வழங்காமல் தவிர்ப்பதற்கு வைத்தியசாலை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் சோதனை மேற்கொள்வதற்காக நோயாளிகளுக்கு ஏற்றப்பட்ட ஊசியின் மாதிரிகள் சுகாதார அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.