காணாமல் போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியா கற்குளத்தில் இன்று நடைபெற்றது.
இறுதி ஊர்வலத்தில், கிராமப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பும் இடம்பெற்றது.இதில், வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், திருகோணமலை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள், தமிழ் விருட்சம் அமைப்பினர், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த பெண், கடந்த சில தினங்களுக்க்கு முன்னர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.