யாழ். இந்துக் கல்லூரியில் பரபரப்பு!! பெரும் கலக்கத்தில் மாணவர்கள்..!

யாழ். இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம் மேற்கொள்ளப்பட்ட போது ஆயுதத்துடன் புகுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்ப்படுகின்றது.

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளையொட்டி யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களால் இன்று இரத்ததான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது இரத்ததான முகாம் நடத்தப்பட்ட இடத்திற்கு வந்த நபரொருவர் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியினை எடுத்து தன்னுடன் வந்த மற்றொரு நபரிடம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தால் இரத்ததானம் வழங்கும் இடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன், முகாமை ஏற்பாடு செய்த மாணவர்கள் கலக்கமடைந்ததாக தெரியவருகிறது.எனினும், ஆயுதத்துடன் வந்த நபர் இரத்ததானம் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை துப்பாக்கியுடன் வந்திருந்த குறித்த நபர் இராணுவ புலனாய்வாளராக இருக்கக்கூடும் என குழப்பம் ஏற்பட்ட பகுதியில் இருந்தவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.