பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் 2 .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் எந்த ஒரு பொழுதுபோக்கும் இல்லாமல் ஓர் வீட்டில் இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பங்கு பெற்றனர்.
இதில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்பட்டு இதுவரை 10 பேர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதில், யாஷிகா ஆனந்த், பாலாஜி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா,ஜனனி என 6 போட்டியாளர்களில் இந்த வாரம் 2 பேர் வெளியேற உள்ளதாக நிகழ்ச்சிக்குழு அறிவித்தது. மேலும் இதில் இறுதி கட்டத்திற்கு நேரடியாக டாஸ்க்கில் ஜனனி வெற்றி பெற்று ஃபைனலுக்கு செல்வதற்கான டிக்கெட்டை பெற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார்.
ஜனனி தவிர, மற்ற 5 பேர் இந்தவார எவிக்ஷன் பட்டியலில் இருந்தனர். இதில், முதல் கட்டமாக நேற்று போட்டியிலிருந்து பாலாஜி வெளியேற்றபட்டார். இதனையடுத்து, யாஷிகா ஆனந்த்-ம் வெளியேற்றப்பட்டார்.
இந்த போட்டியில், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா,ஜனனி நான்கு பேர் மட்டுமே உள்ளனர். இதில் டைட்டில் வின்னராக அனைவரும் எதிர்பார்ப்பது ஜனனியையும் அதற்கு அடுத்தபடியாக ரித்திகாவையும் தான்.
ஆனால், நிலைமை என்னவோ ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னராக்க பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை முதலிலிருந்தே காப்பாற்ற பல வேலைகளை பிக்பாஸ் செய்துள்ளது. ஐஸ்வர்யா எவ்வளவு தான் மட்டமாக நடந்து கொண்டிருந்தாலும் கூட பிக்பாஸ் காப்பாற்றியது. ஐஸ்வர்யா இப்போதே எலிமினேட் ஆகி இருக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் ஐஸ்வர்யாவை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றி வருகிறது.இதனையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஐஸ்வர்யாவை பிக்பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.






