தமிழக அரசியலில் திடுக்கிடும் திருப்பம்..

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தினகரன் பங்கேற்பதாக அழைப்பிதழ் வெளியான நிலையில், அது குறித்து அதிமுக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும் முன்னாள் முதல்வரும் ஆன எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பிறந்தநாள் மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு முடிந்தது.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த வருடம் மதுரையில் கடந்த ஆண்டு ஜூன் 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முதல்வர் பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.

மதுரையில் தொடங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பயணம் தலைநகர் சென்னையில் வருகிற 30-ந்தேதி நிறைவு பெற இருக்கிறது.

இந்த நிறைவு விழாவில் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும்படி பிரமாண்ட ஏற்பாட்டை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்து உள்ளார்கள். மொத்தம் 7 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் வாழ்த்துரை பட்டியலில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தினகரனின் பெயரும் உள்ளது.

இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,

கன்னியாகுமரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பொ.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அதேபோல், சில இடங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏகள் கலந்து கொண்டுள்ளனர்.

இது அரசு நிகழ்ச்சி. அதனால், எம்.எல்.ஏ, எம்.பி என சில பேரை அழைப்பது கடமை. அந்த வகையில், டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

விழாவில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம். விழாவில் கலந்துகொள்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது’ என்று கூறியுள்ளார்.